கவர்ச்சி இடை தெரிய போஸ் கொடுத்த நடிகை..

நடிகை ராஷி கண்ணா தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பிறகு இமைக்க நொடிகள் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அயோக்யா, சங்கத் தமிழன் படங்களில் நடித்தார். தற்போது அரண்மனை 3, மேதாவி, சைதன் க பச்சா படங் களில் நடிக்கிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகை அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். கொரோனா ஊரடங்கிற்கு முன் அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

கொரோனா ஊரடங்கு தளர்வில் துக்ளக் தர்பார் படத்தின் ஷூட்டிங் தொடங்கியபோது அப்படக் குழு அதிதியிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் வேறுபடத்துக்கு கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாகத் தெரிவித்தார், இதையடுத்து அப்படக் குழு அதிதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ராஷி கண்ணாவை துக்ளக் தர்பார் படத்தில் ஒப்பந்தம் செய்தது. இது ராசிக்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பாக அமைந்தது.

பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில் தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே தனது அழகு மற்றும் குமிழி தோற்றம் அழகிய சிரிப்பு காரணமாக ரசிகர்களைப் பெற்றார். அதைத் தக்க வைக்கத் தனது தோற்றத்தை மெலிதாக வைக்க முடிவு செய்து ஜிம்மில் மிகவும் கடினமாக உழைக்கிறார். சில கதாநாயகிகள் மெலிந்தவுடன் தங்கள் அழகை இழக்கிறார்கள், ஆனால் ராஷி உடல் எடையை குறைத்தாலும் தனது அழகை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறார்.

தெலுங்கு படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் உள்ள ராஷி நம்மிலிருந்து வெளியே வரும்போது முககவசம் அணிந்து எலுமிச்சை நிற டாப்ஸ் மற்றும் உடலை இறுக்கமாகப் பிடிக்கும் ஜிம் பேன்ட் அணிந்து கூந்தலைக் காற்றில் பறக்க விட்டு தனது இடை தெரிய ஸ்டைலாக நடந்தபடி புகைப்படத்துக்கு போஸ் தந்தார். இதன் மூலம் தனது இடையை எவ்வளவு கவர்ச்சியாக வைத்திருக்கிறார் என்பதையும் இந்த படத்தின் மூலம் அவர் வெளிப்படுத்தினார்.

You'r reading கவர்ச்சி இடை தெரிய போஸ் கொடுத்த நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஷூட்டிங்கிலிருந்து பாதியில் வெளியேறிய பிரபல நடிகை.. படக் குழு ஷாக்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்