சர்ச்சை இயக்குனர் வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி வீடியோ..

இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது முத்திரையை முன்பு டான் மற்றும் அண்டர் வேல்டு தாதா படங்கள் இயக்கி அதன் மூலம் பதித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சர்ச்சை கருத்துச் சொல்லியும் அடல்ட் படங்கள் எடுத்தும் தனது முத்திரையை வேறுவிதமாகப் பதித்து வருகிறார்.

ராம் கோபால் வர்மா ஒடிடி தளம் ஒன்றைத் தொடங்கி அதில் தான் தயாரிக்கும், இயக்கும் அடல்ட் படங்களை வெளியிட்டு பணத்தை அள்ளி வருகிறார். பணம் ஒன்றே குறிக்கோள் என்பதுபோல் அவர் படத்தில் நடிகைகளை எவ்வளவு ஆபாசமாகச் சித்தரிக்க முடியுமோ அவ்வளவு ஆபாசமாகச் சித்தரிக்கிறார்.தற்போது புரூஸ்லி பாணியிலான மார்ஷ்ல் ஆர்ட்ஸ் படம் ஒன்றை லட்கி என்ற பெயரில் இயக்கி உள்ளார்.

இதில் பிரபல நடிகை பூஜா பஹலெகர் நடித்திருக்கிறார். இப்படத்திலிருந்து ஒரு பாடல் டீஸர் வெளியிட்டிருக்கிறார். ஆண்களுக்குச் சவால் என்ற தலைப்புடன் அந்த டீஸர் வெளியாகி இருக்கிறது. அதில் பூஜா பஹலெகர் மேல் சட்டை ஒன்றும் ஜட்டியும் மட்டும் அணிந்திருக்கிறார். ஒன்றைக் காலை தரையில் ஊன்றி இன்னொரு காலை தலை வரை தூக்கிச் சுழற்றி அங்கு தொங்கவிடப்பட்டிருக்கும் மணம் மூட்டையைத் தாக்கும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது. கடினமான ஒரு காட்சி என்றாலும் அதிலும் கவர்ச்சியை எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படி கேமிரா ஆங்கிள் வைத்துக் காட்டி இருக்கிறார் வர்மா. இதன் முழுபாடல் டீஸர் நவம்பர் 27ம் தேதி அதாவது கராத்தே மன்னன் புரூஸ்லீ பிறந்த நாளன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஜா இந்த காட்சியில் கால்களால் பல முறை பஞ்ச் செய்கிறார். ஆனால் வர்மாவின் கேமரா எங்கோ அலைபாய்ந்திருக்கிறது. மார்ஷல் ஆர்ட்ஸ் என்ற பெயரில் இப்படியொரு கவர்ச்சியை அவர் அரங்கேற்றி இருப்பதற்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் வர்மா, சசிகலா என்ற பெயரில் படம் இயக்க உள்ளதாகவும் அதில் தலைவிக்கு என்னவெல்லாம் நடந்தது என்பது பற்றி அரசியல் ரகசியங்களை அம்பலப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். வரும் டிசம்பரில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

You'r reading சர்ச்சை இயக்குனர் வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி வீடியோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புரட்டிப் போட்ட புயல்கள்.. புள்ளி விவரத் தொகுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்