கையில் ஒயின் கிளாஸுடன் வலம் வந்த பிரபல ஹீரோயின்..

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். நீண்ட காலமாக திருமணத்தை தள்ளி போட்டு வந்த காஜல் இந்த ஊரடங்கில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி கடந்த 30ஆம் தேதி தொழில் அதிபருடன் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு கலர்புல்லான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தினமும் ஒரு அழகான சேலையை அணிந்து தந்து கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து அவரது சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்பு காஜல் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார். தினமும் இயற்கையின் அழகு, மற்றும் பல போஸில் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்வதையே வழக்கமாக செய்து வந்தார்.

அந்த விதத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தினமும் ஒரு போட்டோ விதம் வெளியிட்டு வந்த காஜலுக்கு அதுவே பழகிவிட்டது போல.. இதனால் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதக்காலம் ஆனதால் திருமண கோலத்தில் கணவருடன் மது அருந்துவது போல் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் கணவர் காஜலை தூக்கிய காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்கள் யாவும் தீயாய் பரவி வருகிறது.

You'r reading கையில் ஒயின் கிளாஸுடன் வலம் வந்த பிரபல ஹீரோயின்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 800 ரூபாயாக குறைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்