மீண்டும் இணையும் வேலைக்காரன் பட ஜோடி..

சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா மீண்டும் நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், சிவகார்த்திகேயனுக்கு சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அவர் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, இயக்குனர் ராஜேஷிடம் கேட்டபோது, “நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. சாய்பல்லவி நடிக்கப்பபோவதாக பரவும் செய்தி பொய்யானது” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மீண்டும் இணையும் வேலைக்காரன் பட ஜோடி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பதட்டமான சூழல் - ரஜினிக்கான மாநாட்டை கைவிடுகிறார் தமிழருவி மணியன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்