மணிரத்னம் இயக்கும் மல்டி ஸ்டார் சரித்திர படம் என்னவானது? புதிய அப்டேட்..

இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் படமாக்குகிறார். இதில் விக்ரம் ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதன் படப் பிடிப்பு கொரோனா காலகட்டத்துக்கு முன்பு வட நாட்டில் காட்டுப் பகுதியில் நடந்தது. பிறகு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது. அடுத்த 4 மாதத்துக்கும் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் ஷூட்டிங் தொடங்க அரசு அனுமதி அளித்தது. மணிரத்னமும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி நடத்த எண்ணினார். ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பிறகு குணம் அடைந்த ஐஸ்வர்யாராய் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

இதனால் மணிரத்னத்துக்கு அப்போது ஷூட்டிங் தொடங்க முடியாமல் போது தற்போது எல்லா படப்பிடிப்புகளும் தொடங்கி நடந்து வருகிறது. எனவே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் வருண் ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது இதில் விக்ரம் கீர்த்தி சுரேஷ் கலந்துகொள்கின்றனர். பிறகு படக் குழு மைசூர் செல்கிறது. இதையடுத்து இலங்கையில் வரும் ஏப்ரல் மாதம் மத்தியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.பொன்னியின் செல்வன் அப்படத்தில் சத்யராஜ் போன்ற சில முக்கிய நடிகர்கள் நடிக்க மறுத்தனர். அதற்கு இயக்குனர் போட்டிருந்த கடுமையான விதிமுறைகளால் சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் படத்திலிருந்து விலகினர்.

You'r reading மணிரத்னம் இயக்கும் மல்டி ஸ்டார் சரித்திர படம் என்னவானது? புதிய அப்டேட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரள உள்ளாட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்