சிறையிலிருந்த நடிகை மருத்துவமனையில் அனுமதி..

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா மற்றும் சிலை கைது செய்யப்பட்டனர். நைஜீரியா வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி மோதல் எழுந்தது. இதையடுத்து இருவரும் சக சிறைக் கைதிகள் அறையில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர். ராகினி தனக்கு முதுகு வலி இருப்பதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் படியும் அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகினி, சிறைச்சாலையில் தூங்குவதற்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததால் முதுகு வலி இருப்பதாகச் சிறை அதிகாரிகளிடம் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரியிருந்தார், ஆனால் இறுதியில் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள சிறை மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை பெறும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் மருத்துவர்களைக் கொண்ட குழு அவருக்குச் சிகிச்சை அளித்தது. ஆனாலும் அவர் முதுகுவலி அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார், ராகினியின் முதுகுவலி குறித்து டாக்டர்கள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப அவரை மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிப்பதா அல்லது சிறையில் அடைப்பதா என்பது பற்றி அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளனர். ராகினி ஏற்கனவே ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரினார். அதில் தான் நிரபராதி ஆனால் என்னைச் சிறையில் அடைத்துள்ளனர். கீழ்கோர்ட் ஜாமீன் தர மறுத்துவிட்டது. ஜாமீனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இது குறித்து விளக்கம் கேட்டு கீழ் கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ் அனுப்பியது.

இதற்கிடையில் நடிகை சஞ்சனா கல்ராணி கீழ் கோர்ட்டில் ஜாமீன் கிடைக்காத நிலையில் தனது உடல் நிலை பாத்திக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு கர்நாடகா கடந்த சில நாட்களுக்கு முன் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். அவரது உடல்நிலைபற்றி டாக்டர்கள் கருத்தை கோர்ட்டி கேட்டிருந்தது. அவர்கள் அளித்த பதிலில் சஞ்ஜனாவுக்கு உண்மையில் உடல் பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இதையடுத்து சஞ்சனாவுக்கு நிபந்தனை பெயரில் ஜாமீன் அளிக்கப்பட்டது. அவர் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

You'r reading சிறையிலிருந்த நடிகை மருத்துவமனையில் அனுமதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் 30வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. காலிஸ்தான் உதவி வருகிறதா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்