விக்ரம் தலையில் சுழலும் டிஜிட்டல் எண்கள்..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, பாபு ஆண்டனி, மிர்னாலினி ரவி, ரோஷன் மேத்யூ, மாமு கோயா, ரேணுகா மற்றும் மியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ஹரிஷ் கண்ணன்.

கோப்ரா படத்தில் பல மாறு பட்ட தோற்றங்களில் ,விக்ரம் நடிக்கிறார். கடந்த சில மாதங் களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் விக்ரம் பலவித தோற்றங்களில் காணப்பட்டர். அது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.கோப்ரா படத்தில் விக்ரமின் 2வது தோற்றம் நாளை வெளியாகும் என்று நேற்று மாலை, அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். இது விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்காக காத்திருந்தனர். அதன்படி கிறிஸ்துமஸ் தினமான இன்று இரண்டாவது தோற்றம் வெளியிடப்பட்டது.

இதில் விக்ரம் டிஜிட்டல் வடிவத்தில் இருக்க அவரது ஒரு பக்க தலையிலிருந்து கணக்கிலடங்காத எண்கள் சிதறுவது போல் காணப்படுகிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு கணித தீர்வு உள்ளது" என்றும் அத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களிலும் விக்ரம் கவனம் செலுத்தி வருகிறார். கோப்ரா படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. பொன்னியின் செல்வன் படப் பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொடங்க காலதாமதமாகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு சில மாதங்களுக்கு முன் கொரோ னா தொற்று ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

அதன்பிறகு அவர் வீட்டிலேயே தங்கி இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்வது பற்றி அவர் இன்னும் முடிவு எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ஜனவரி மாதம் முதல் இதன் படப் பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading விக்ரம் தலையில் சுழலும் டிஜிட்டல் எண்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் சேதுபதிக்கு பதிலாக வில்லன் ஆகும் நடிகர்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்