ரஜினி மம்முட்டி இணையும் புது படம்

மராத்தியில் முதல் முறையாக நடிக்கிறார் ரஜினி

26 வருடங்களுக்கு முன்  1991-ம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடித்த `தளபதி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழக சூப்பர் ஸ்டாரும்,  கேரள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த `தளபதி' அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு அவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை.

இப்போது ஒரு மராத்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை தீபக் பாவேஷ் இயக்குகிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்த படத்திற்கு `பஷாயதன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது, மராத்தியில் முதல் முறையாக நடிக்கிறார்.

You'r reading ரஜினி மம்முட்டி இணையும் புது படம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் சேதுபதி-புதுபட அப்டேட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்