65வது தேசிய திரைப்பட விருதுகள்: ஏ.ஆர்.ரகுமான், நடிகை பார்வதிக்கு தேதிய விருது அறிவிப்பு

இசையமைப்பளார் ஏ.ஆர்.ரகுமான், நடிகை பார்வதி உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த தமிழ் படமாக ‘டூலட்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்படுகிறது. இந்த படத்தில் பாடல் ஒன்று பாடிய சாஷா திரிபாதிக்கு சிறந்த பாடகிக்கான விருது வழங்கப்படுகிறது.

இதேபோல், மாம் படத்திற்காக மறைந்த ஸ்ரீதேவிக்கும், மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்த பார்வதிக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 65வது தேசிய திரைப்பட விருதுகள்: ஏ.ஆர்.ரகுமான், நடிகை பார்வதிக்கு தேதிய விருது அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி நான் மனித இனமல்ல... விலங்கினம்: நடிகர் பொன்வண்ணன் வேதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்