அரசியல் அதிகாரத்தால் ஷூட்டிங் பர்மிஷனா..? சீனியர் நடிகை பதில்..

அரசியலில் திரையுலகினர் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. அந்த காலத்தில் அரசியல் என்றாலே பல நடிகர், நடிகைகள் ஒதுங்கி அதற்குப் பதில் சொல்லவிரும்பவில்லை என்று நழுவிவிடுவார்கள். இப்போது ஹீரோ, ஹீரோயின் முதல் காமெடி நடிகர், நடிகை வரை அரசியலில் ஈடுபட்டு கட்சியில் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதுடன் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு ஜெயித்து சட்டசபை, நாடாளுமன்றங்களுக்குச் செல்கிறார்கள்.

அரசியல் பின்னணியை வைத்துக் கொண்டு பல்வேறு சர்ச்சைகளையும் சில நடிகர், நடிகைகள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். அவர்களில் ஒருவர் நடிகை கங்கனா ரனாவத். பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் கூறி போலீஸ், கோர்ட் என்று சென்றுகொண்டிருக்கிறார். தமிழில் முரட்டு காளை, கழுகு, கரையெல்லாம் செண்பக பூ உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன் கன்னட நடிகர் அம்பரிஷை திருமணம் செய்துகொண்டவர் சுமலதா.

கணவர் இறந்த பின் இவர் பாஜ ஆதரவுடன் கர்நாடகா மாண்டிய தொகுதியில் எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சுமலதா. இவரது மகன் அபிஷேக். இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பேட் மேனர்ஸ் என்ற படத்தில் அபிஷேக் தற்போது நடித்து வருகிறார். துனியா சூரி இயக்குகிறார். பெங்களூரூவில் ஒரு சில இடங்களில் ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி கிடைப்பதில்லை. அதுபோல் கைவிடப்பட்ட சர்க்கரை ஆலை ஒன்றிலும் ஷூட்டிங் நடத்த அனுமதி தரப்படுவதில்லை. ஆனால் அபிஷேக் நடிக்கும் படத்துக்கு அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதற்கு சில விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

படப் பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் சர்க்கரை ஆலையில் படப்பிடிப்புக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது. நடிகர் அபிஷேக்கின் தாயார் சுமலதா எம் பி ஆக இருக்கிறார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அனுமதியை அவர் பெற்றிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள். அதனை சுமலதா மறுத்திருக்கிறார்.அவர் கூறும்போது, என் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. படப்பிடிப்பு நடத்துவதால் சம்பந்தபட்ட இடத்துக்கு வருமானம் கிடைக்கும் அந்த அடிப்படையில் மாவட்ட நிர்வாக அனுமதி அளித்திருக்கலாம். படப்பிடிப்புக்கு அனுமதி தரப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை என்றார்.

You'r reading அரசியல் அதிகாரத்தால் ஷூட்டிங் பர்மிஷனா..? சீனியர் நடிகை பதில்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு வாரத்தில் நேரில் ஆஜராக பால் தினகரனுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்