ரசிகர் ஒருவர் ஆபாச போட்டோ கேட்டதால் ருத்ரதாண்டவம் ஆடிய பிரபல நடிகை..!

பள்ளிபடிப்பு படிக்கும் பொழுதே தமிழ் மக்களின் மனதில் நடிகையாய் குடிபெயர்ந்தவர் தான் லட்சுமி மேனன். இவரது முதல் திரைப்படத்திலே வெற்றி வாகையை சூடியதால் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகையில் ஒருவர் என்ற பெயரை பெற்றார். கும்கி படத்தில் இவரது நடிப்பு திறமையை கண்டு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவரை சூழ தொடங்கின. கும்கி பிறகு சுந்தரபாண்டியன் போன்ற கிராமத்து கதைகளிலே ஆர்வம் காட்டி வந்தார்.

நடுவில் இவரது உடல் மள மளவென ஏறி பயங்கர குண்டானார். இதனால் சினிமாவில் இவரது மவுஸ் குறைய தொடங்கியது. இவர் நடித்த சில படங்களும் தோல்வியில் முடிந்தது. இதனால் சினிமாவை விட்டு விலகிய லட்சுமி மேனன் 2021 ஆம் ஆண்டு புலிக்குத்தி பாண்டி திரைப்படம் மூலம் பயங்கர ரீ என்ட்ரி கொடுத்தார். புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரமானது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மக்களுடன் மேலும் உறவை மேம்படுத்த இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் மக்களை நேரடியாக தொடர்ப்புக்கொண்டு அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு தில்லாலங்கடி ரசிகர் லட்சுமி மேனனின் ஆபாச போட்டோ கேட்டதால் பயங்கர கோவமாகி சொல்ல கூடாத கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அசிங்கமாக திட்டிவிட்டாராம். இதையடுத்து மற்ற நடிகைகள் என்ன இவர் இப்படி ஓப்பனாக திட்டிவிட்டாரே?? என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

You'r reading ரசிகர் ஒருவர் ஆபாச போட்டோ கேட்டதால் ருத்ரதாண்டவம் ஆடிய பிரபல நடிகை..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் பிஎஸ் நிவாஸ் திடீர் மரணம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்