பிரசாத்திலிருந்து வெளிவந்த இளையராஜா புது ரெக்கார்டிங் ஸ்டுடியோ.. இன்று இசை பணி தொடக்கம்..

இசைஞானி இளையராஜா, கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசை கம்போஸ் செய்து வந்தார். மனதுக்கினிய பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்துதான் இளையராஜா கம்போஸிங் செய்தளித்தார். 80களின் பாடல்கள் என்றால் இளையராஜா என்ற முத்திரை பதிந்துவிட்டது. அவரது பாடல்கள் ஒலிக்காத நாளே கிடையாது. 80 காலகட்ட படங்கள் இப்போது உருவாக்கப்பட்டாலும் இளையாராஜா பாடலை பின்னணியில் சுழலவிட்டுத்தான் படமாக்குகின்றனர். கடந்த சில வருடங்களாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் நிலவி வந்தது. பிரசாத் இசை கூடத்திலிருந்து இளையராஜாவை ஸ்டுடியோ நிர்வாகம் வெளியேறச் சொன்னது.

கடந்த ஆண்டு இதை எதிர்த்து இயக்குனர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி போன்ற பிரபல இயக்குனர்கள் பிரசாத் ஸ்டுடியோ முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் சமாதான பேச்சு வார்த்தை எடுபடவில்லை. கோர்ட் வரை சென்ற இந்த விவாகராம் கடும் மொதலுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இளையராஜா தனது உடமைகளை ஸ்டியோவிலிருந்து தனது ஆட்களை அனுப்பி அங்கிருந்த தனது உடைமைகளை திரும்ப எடுத்துக் கொண்டார். அத்துடன் இந்த பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. தற்போது இளையராஜா சொந்தமாக ரெகார்டிங் ஸ்டுடியோ கட்டி உள்ளார்.

அங்கு இன்று இசை பணியை இளையராஜா தொடங்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் உருவாகிறது. இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். அதற்கான பாடல் பதிவை இளையராஜா இன்று புது ரெக்கார்டி ஸ்டுடியோவில் தொடங்கினார். இதில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகஷின் தங்கை பவானிஸ்ரீ நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் சூரி நடிக்க விஜய்சேதுபதி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு இளையாஜா முதன் முறையாக இசை அமைக்கிறார். மேலும் இளையராஜா தற்போது விஜய் சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

You'r reading பிரசாத்திலிருந்து வெளிவந்த இளையராஜா புது ரெக்கார்டிங் ஸ்டுடியோ.. இன்று இசை பணி தொடக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெ சமாதியை மூடிவிட்டால் நினைப்பது நடக்குமா என்ன? டிடிவி தினகரன் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்