விமானத்தில் பறக்க பிகினி உடைக்கு தடை.. இன்ஸ்டா மாடல் அழகி கண்டனம்..

இன்ஸ்டாகிராமின் புகழ் பெற்ற மாடல் அழகி தான் இசபெல் எலினார். இவர் கடந்த வருடம் தனது கணவருடன் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில் இருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் செல்ல இருந்தார். அப்பொழுது அவர் கருப்பு நிற சிறிய மேலாடையை அணிந்திருந்தார். அது பார்க்க பிகினி போல் இருந்ததால் விமானத்தில் பறக்க ஜெட் ஸ்டார் நிறுவனம் தடை விதித்தது. இதனால் இசபெல் கோவமடைந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு நடந்த அவமானத்தை பற்றி பகிர்ந்து இருந்தார். அதாவது ஒரு பெண்ணின் ஆடையை பற்றி குறை சொல்ல நாம் என்ன 1921 ஆம் ஆண்டிலா இருக்கிறோம்?

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 2021. முதலில் அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கொடுத்த வேற ஆடையை அணிந்து கொண்டு நான் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் அந்த இடத்தில் எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. இதுவே எனது மார்பகங்கள் சிறிதாக இருந்து இருந்தால் எந்த பிரச்னையும் நடந்து இருக்காது என்பதை உறுதியாக கூறி இருந்தார். இதை கேள்விப்பட்ட ஜெட் ஸ்டார் நிறுவனத்தின் செய்தியாளர் தங்கள் பக்கத்தில் உள்ள தவறை புரிந்து கொண்டு இசபெல்லிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த நிகழ்வு குறித்து சோசியல் மீடியா முழுவதும் வைரல் ஆகி வருகிறது.

You'r reading விமானத்தில் பறக்க பிகினி உடைக்கு தடை.. இன்ஸ்டா மாடல் அழகி கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேளாண் சட்ட விவகாரம்.. நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்