விக்ரம் பட ஷூட்டிங்கை முடித்த ஹீரோயின்..

நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதில் கணக்கியல் மேதையாக அவர் வேட மேற்றிருக்கிறார். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை எளிதாக தீர்வு காணும் ஜீனியஸாக நடிக்கிறார். இப்படத்தில் விக்ரமின் ஃப்ர்ஸ்ட்லுக், செகண்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஃபர்ஸ்ட்லுக்கில் 5க்கும் அதிகமான வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் காணப்பட்டது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொண்டு நடித்த வந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து விக்ரமிற்கு அழைப்பு வந்தது.

உடனடியாக கோப்ரா படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டார். அங்கு பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இதில் விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா என எல்லா நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். கோப்ரா படப்பிடிப்பு பணியை மிச்சம் வைத்து விட்டு விக்ரம் பொன்னியின் செல்வனுக்கு சென்றாலும் கோப்ரா பட ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் காட்சிகள் படமாகி வந்தது.

அவரது காட்சி முற்றிலுமாக முடிக்கப்பட்டதையடுத்து அவருக்கு படக்குழுவினர் ட்ரீட் அளித்தனர். கேக் வரவழைத்து அவரை வெட்டச் சொல்லி வாழ்த்து கூறி விடை கொடுத்தது படக்குழு. விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் பாக்கி இருப்பதால் அவரது வரவுக்காக கோப்ரா குழு காத்திருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் நடிக்க உள்ளார். தந்தை மகன் இருவரும் முதன்முறையாக இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர்.

You'r reading விக்ரம் பட ஷூட்டிங்கை முடித்த ஹீரோயின்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண்ணின் நிறம்பற்றி பேசி வம்பில் சிக்கிய ஹீரோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்