கிளைமாக்ஸ்க்கு வரும் கவின் லாஸ்லியாவின் காதல் உறவு..!

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக நுழைந்து காதலர்களாக வெளியே வந்தவர்கள் தான் கவின் மற்றும் லாஸ்லியா. இவர்களது ஜோடி மக்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டதால் சோசியல் மீடியாவில், இவரது ரசிகர்கள் 'கவிலியா' என்ற பக்கத்தை தொடங்கி பல ரசிகர்கள் பட்டாளம் அவர்களது காதலுக்கு துணையாய் நிற்கின்றது. லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது அவரது மகளின் செயலை குறித்து கண்டித்தார். இதனால் இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒருத்தரை ஒருத்தர் முகம் கொடுத்து கூட பேசிக்கவில்லை. ஆனால் இவர்களை குறித்து கிசுகிசுக்கள் பரவிய வன்னம் தான் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு லாஸ்லியாவிற்கு லண்டன் மாப்பிள்ளையுடன் திருமணம் என்ற செய்தி அடிப்பட்டது. அப்போ கவினின் கதி என்ன?? என்று அவர்களது ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால் அதற்குள் அவரது தந்தை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார். அவரது தந்தை இறந்த பிறகு படு கவர்ச்சியாய் போட்டோ ஷூட்டில் கலந்து கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் கவினுடன் பேசி வருகிறார் என்றெல்லாம் செய்திகள் கிளம்புகிறது. இதனை குறித்து லாஸ்லியா கூறியதாவது:- கவின் மற்றும் என்னுடைய உறவு எங்கள் தனிப்பட்ட விஷயம். நாங்கள் நடிக்கின்ற படங்கள் குறித்து மக்கள் கேட்கலாம். ஆனால் கவின் பற்றி பேச எனக்கு அவசியம் எதுவுமில்லை என்று முகத்தில் அடித்தது போல் கூறியுள்ளார்.

You'r reading கிளைமாக்ஸ்க்கு வரும் கவின் லாஸ்லியாவின் காதல் உறவு..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது விராட் கோஹ்லி காட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்