இரவு முழுவதும் கண்விழித்து லைவ் டெலிகாஸ்ட்டில் நடித்த காஜல்..

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளிவர இருக்கும் "லைவ் டெலிகாஸ்ட்" தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது.மாந்த்ரீக சக்திகள் நிறைந்த , ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலை தொடர் ஒன்றைப் படமாக்கப்படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே "லைவ் டெலிகாஸ்ட்".தொடரில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் "நாங்கள் படப்பிடிப்புக்குத் தேர்ந்து எடுத்த இடம் மிக மிகப் பொருத்தமானது.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது.மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்குத் தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயேதான் நடந்தது. படப்பிடிப்புக்குப் பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்கக் கூட முடியவில்லை. படப் பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்" என்று திகில் மாறா உணர்வுடன் கூறினார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, "கயல்" ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணா சலம், மற்றும் பலர் நடித்து இருக்கும் இந்த தொடர் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது.வருகிற 12 ஆம் தேதி"லைவ் டெலிகாஸ்ட்" டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி +ஹாட் ஸ்டார் பிரீமியம் ஆகியவற்றில் ஒளிபரப்பு ஆக உள்ளது.காஜல் அகர்வால் தற்போது திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, சிரஞ்சீவி ராம்குமார் நடிக்கும் ஆச்சார்யா படங்களில் நடித்து வருகிறார்.

You'r reading இரவு முழுவதும் கண்விழித்து லைவ் டெலிகாஸ்ட்டில் நடித்த காஜல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரைமணி நேரம் ஆபாசப் படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்