தனுஷ் வீட்டு பூமி பூஜையில் சூப்பர் ஸ்டார்.. ரஜினியை கண்டு ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என்ற படங்களை டைரக்டு செய்ததுடன் சின்ன வீரன் என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். சில படங்களில் பாடலும் பாடி உள்ளார். விசில் படத்தில் நட்பே நட்பே, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசை தான் ஆகிய பாடல்கள் பாடி இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு குரல் கொடுத்து டப்பிங் பேசி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ரஜினி குடியிருக்கும் போயஸ் கார்டனிலேயே புதிய இடமொன்றை வாங்கினார் தனுஷ். அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி புதிதாக வீடு ஒன்றைக் கட்டத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பூமி பூஜை இன்று (பிப்ரவரி 10) காலை நடைபெற்றது. அந்த பூமி பூஜையில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இதில் ரஜினியும் கலந்துகொண்டு மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தார்.உடல்நிலை பாதித்து வீட்டில் ஓய்விலிருந்த ரஜினிகாந்த் தற்போதுதான் இந்த விழாவுக்காக வந்திருந்தார்.

ரஜினி முகக் கவசத்துடன் இருக்கும் புகைப் படங்கள் நெட்டில் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த்தைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதால், பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தேர்தல் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கவிருந்தனர். ஆனால் தேர்தல் மே மாதம் நடக்கும் எனத் தெரிவதால் முன்கூட்டியே படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். தெரிகிறது.நடிகர் தனுஷ் புது வீடு கட்டுவதற்காக இன்று பூமி பூஜை முடிந்துவிட்டதால், ஹாலிவுட் படமான தி கிரே மேன் படப்பிடிப்பில் பங்கேற்க அமெரிக்க செல்லவிருக்கிறார்.'அவெஞ்சர்ஸ்' பட இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்குகின்றனர்.

You'r reading தனுஷ் வீட்டு பூமி பூஜையில் சூப்பர் ஸ்டார்.. ரஜினியை கண்டு ரசிகர்கள் உற்சாகம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரவு முழுவதும் கண்விழித்து லைவ் டெலிகாஸ்ட்டில் நடித்த காஜல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்