ஹிட் இயக்குநர்களுக்கு ஹீரோக்கள் வலை..

முன்னணி ஹீரோக்களுக்கு இயக்குனர்கள் வலைவீசி வந்தனர். தற்போது ஹிட் படம் தரும் இயக்குனர்களுக்கு பிரபல ஹீரோக்கள் வலை வீசுகின்றனர்.தமிழில் கார்த்தி நடித்த கைதி படத்தை ஹிட்டாகினார் லோகேஷ் கனகராஜ் அவருக்கு அடுத்த படமே விஜயிடமிருந்து வாய்ப்பு வந்தது. மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட்டானது. சுமார் 250 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அதற்கு அடுத்த படமே ரஜினியை இயக்கும் வாய்ப்பு வந்தது பிறகு அது பேச்சு வார்த்தையோடு சூழல் மாறிப் போனாலும் கமல்ஹாசன் படத்தை இயக்க வாய்ப்பு அமைந்தது. விக்ரம் என்ற படத்தை இயக்குகிறார்.

இதன் டீஸர் வெளியாகி வரவேற்பு பெற்றது. கமல் தற்போது அரசியல் பிரசாரத்தில் இருப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் கே ஜி எ ஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல். கே ஜி எ ஃ ப் சேப்டர் 2 படம் இயங்கிக் கொண்டிருக்கும்போதே பிரபாஸிடமிருந்து அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தை முடிந்து படம் முடிவாகி தற்போது சலார் என்ற பெயரில் ஷூட்டிங் நடக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் ஜூனியர் என் டி ஆரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. பிரசாந்த் நீல் அந்த படத்தை ஏற்றிருக்கிறார். கே ஜி எ ப் 2 ரிலீஸ் மற்றும் சலார் ரிலீசுக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜூனியர் என் டி ஆர் படம் தொடங்க உள்ளது.அதேபோல் ராஜமவுலி இயக்கத்தில். மகேஷ்பாபு நடிக்க உள்ளார்.தமிழில் லோகேஷ் கனகராஜ், ஏ ஆர் முருகதாஸ் உடன் சிம்பு பேச்சு வார்த்தையில் உள்ளார்.

You'r reading ஹிட் இயக்குநர்களுக்கு ஹீரோக்கள் வலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்