ஹேம்நாத்துக்கு திடீர் ஜாமீன்.. விஜேசித்ரா தற்கொலை வழக்கில் நீடிக்கும் மர்மம்..

தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டவர். இச்சிறப்பு மிகுந்த சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சித்ரா தற்கொலை செய்துகொண்ட நாளில் அவரது கணவர் ஹேம்நாத்தும் அந்த ஹோட்டலில் தங்கி இருந்ததால் போலீஸ் அவர் மேல் சந்தேகப்பட்டு விசாரணைக்காக டிசம்பர் 14 ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஹேம்நாத் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சித்ராவுக்கு எனக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சித்தரவுடன் நடிக்கும் நடிகர்களின் உறவுகளை வைத்து அவரை சந்தேகப்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தது.

இதனால் எந்த தவறும் செய்யாத எனக்கு ஜாமீன் தருமாறு அவரது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் நிபுணர் குழு உயர் நீதிமன்றத்தில் சித்ரா செய்து கொண்டது முற்றிலும் தற்கொலை தான் என்ற செய்தியை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் சென்னை நீதிமன்றம் ஹேம்நாத்துக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. எப்போ சித்துவின் உடல் சாம்பலானதோ அன்றே உண்மையும் எரிந்துவிட்டது என்று சித்துவின் ரசிகர்கள் அவர்களது கஷ்டங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

You'r reading ஹேம்நாத்துக்கு திடீர் ஜாமீன்.. விஜேசித்ரா தற்கொலை வழக்கில் நீடிக்கும் மர்மம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்