தல - தளபதி இயக்குனர்கள் திடீர் சந்திப்பு..

இயக்குனர்கள் எச். வினோத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களாக உள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு லோகேஷ் இயக்குனர் எச். வினோத்தை சந்தித்த புகைப் படத்தைப் இணையதள பக்கத்தில் பகிர்ந்தார்.வினோத் தற்போது அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார். ​லோகேஷ் சமீபத்தில் வெளியான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் வெற்றியைச் சுவைத்த நிலையில் இருக்கிறார். மாஸ்டரின் வெற்றியில் மகிழ்ந்திருக்கும் லோகேஷ் அடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார்.

இந்த இரண்டு இயக்குனர்களும் நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு எங்கள் சந்திப்பு நடந்தது என்றார் லோகேஷ். இதற்கான புகைப்படத்தைப் பகிர்ந்த இயக்குனர் "பல ஆண்டுகளுக்கு பிறகு வினோத் அண்ணாவுடன் நல்ல நேரம் செலவிட்டேன் என குறிப்பிட்டிருந்தார்.லோகேஷ் - வினோத் சந்திப்பில் என்ன விஷயங்கள் பேசினார்கள் என்பதுபற்றி தகவல் இல்லை. அதேசமயம் அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.

எச் வினோத் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இது இந்தி படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் இரண்டாவது முறையாக வலிமை படத்திற்காக இணைந்திருக்கிறார் வினோத்.லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மற்றும் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ .250 கோடிக்கு மேல் சம்பாதித்தது. கமல்ஹாசனின் விக்ரம் படம் முன் தயாரிப்பு பணியில் லோகேஷ் பிஸியாக உள்ளார், இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. இதற்கிடையில், அவர் விஜய் சேதுபதி மற்றும் பிற நடிகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

You'r reading தல - தளபதி இயக்குனர்கள் திடீர் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மறைந்த தந்தையின் பட டிரெய்லரை வெளியிட்ட குழந்தை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்