சமந்தா நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட புராண படம்..

அனுஷ்காவுக்கு பெரிய இமேஜை உருவாக்கி கொடுத்த படங்களில் ஒன்று ருத்ரம்மாதேவி. இப்படத்தை குணசேகர் இயக்கினார். தமிழ், தெலுங்கில் வெளியாகி இப்படம் வெற்றி பெற்றது. இயக்குனர் குணசேகர் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஒகடு என்ற படத்தை இயக்கி இருந்தார். அப்படமும் பெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன் தமிழில் விஜய் நடிக்கக் கில்லி என்ற பெயரில் தரணி இயக்கத்தில் ரீமேக் ஆனது. இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.

2012ம் ஆண்டு அனுஷ்கா நடித்த ருத்ரம்மா தேவி படத்தை வழங்கிய குணசேகரன் அதன்பிறகு 9 வருடம் கழித்து புராண படம் இயக்குகிறார். சாகுந்தலம் புராண படமே தற்போது திரைப்படமாகிறது. விரைவில் சாகுந்தலத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளை வரும் மார்ச் 20ம் தேதி தொடங்குவதற்காக முன்னேற்பாடு பணிகளில் இயக்குனர் தீவிரமாக இருக்கிறார். இதற்காக ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருகிறது.

ருத்ரமாதேவி என்ற சரித்திர படமாக உருவான நிலையில் சாகுந்தலம் புராணப் படமாக உருவாகிறது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ஹீரோவாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். இப்படத்திற்காக சமந்தா பெரும் தொகையை ஊதியமாக பெறுகிறார். முன்னதாக இந்த பட வாய்ப்பை சமந்தா ஏற்க மறுத்தார். ஆனால் தில் ராஜு தான் அவரை சமாதானப்படுத்தி காஷீட் பெற்றார்.இதற்கிடையில் விக்னேஷ் சிவனின் இருமொழி படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.சமந்தா கொரோனா கால கட்டத்தில் வீட்டில் ஓய்வில் இருந்தார். கொரோனா தளர்வில் கணவருடன் மாலத் தீவுக்குச் சென்று திரும்பினார். இதையடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

You'r reading சமந்தா நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட புராண படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபாஸுடன் மோதலுக்கு தயாரான ஹீரோயின்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்