முதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..

புதுமுக நடிகைகள் அறிமுகமாகும் போது சலுகை சம்பளம்போல் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்கின்றனர். அந்த படம் வெளியாகி ஹிட்டானால் அறிமுக நடிகையின் அடுத்த படத்துக்கான சம்பளம் அவர் நிர்ணயிப்பது தான் என்ற நிலை உருவாகி விடுகிறது.மங்களூர் அழகி கிருதி ஷெட்டி டோலிவுட்டில் உப்பெனா படம் மூலம் அறிமுகமானார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதையடுத்து கிருத்தி ஷெட்டிக்கு பட வாய்ப்பு கொட்டுகிறது. சுமார் ஒன்பது படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. 17 வயதாகும் கிருத்தி தற்போது மகிழ்ச்சியில் மிதக்கிறார்.

உப்பெனா படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அவருடன் கிருத்தி ஷெட்டி நடித்த உணர்ச்சிகரமான காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கிருத்தியின் நடிப்பு பாராட்டு பெற்றது. அது அவருக்குப் பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இந்த காட்சியை எப்படி தனது திறமையை வெளிப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டாரோ அதேபோல் பட வாய்ப்பையும் அவர் பயன்படுத்திய விவரம் தெரியவந்துள்ளது. உப்பெனா படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி ஒப்பந்தம் ஆகவில்லை, ​​2 கண்ட்ரீஸ் படத்தில் நடித்த நடிகை மனிஷா ராஜ் என்பவர் ஹீரோ பஞ்ச வைஷ்ணவ் தேஜுக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாகக் கிருத்தி ஷெட்டி நடிக்கத் தேர்வானார்.கிருத்தி ஷெட்டி தற்போது தனது சம்பளத்தை சர்ரென உயர்த்தி இருக்கிறார். புதிய படமொன்றில் நடிக்கக் கேட்ட போது ஏற்கனவே வாங்கிய சம்பளத்தைவிட அதிகமாகப் பல மடங்கு உயர்த்தி 50 லட்சம் கேட்கிறாராம். ஒரு சில நடிகைகளில் கோடிகளில் சம்பளம் கேட்கும் நிலையில் கிருத்தி அவர் கேட்கும் சம்பளத்தைத் தரத் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இனி கிருத்தி தனது சம்பளத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை அந்த வேலையை தயாரிப்பாளர்களே அவரது கால்ஷீட் பெறுவதற்காக சீக்கிரமே கோடிகளில் பேசத் தயாராகி விடுவார்கள் என்கிறது சினிமா வட்டாரம்.இதற்கிடையில் கிருத்தி ஷெட்டி அடுத்து லிங்குசாமி இயக்கும் தமிழ், தெலுங்கு என இருமொழியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

You'r reading முதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமந்தா நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட புராண படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்