பிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்தார் இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி. இப்படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. படப்பிடிப்பின்போது நிரஞ்சனி, தேசிங் பெரியசாமிக்கு காதல் மலர்ந்தது. இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ரக்ஷன் நிரஞ்சனியின் ஜோடியாக நடித்தார்.

தேசிய விருது திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் கனியை திருமணம் செய்து கொண்டவர் இயக்குனர் திரு. இவர் கடந்த வாரத்தில் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனியின் திருமணம் பற்றிய அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனியின் பெயருடன் திருமண அழைப்பிதழின் படத்துடன் தகவல் பகிர்ந்து வெளிப்படுத்தினார்.'கண்ணும் கண்ணம் கொள்ளையடித்தால்' படத்தில் நடிப்பதற்கு முன் வாய் மூடி பேசவும், சிகரம் தொடு, காவிய தலைவன் மற்றும் கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார் நிரஞ்சனி.

நிரஞ்சனி, தேசிங்கு பெரிய சாமி திருமணம் இன்று 25ம் தேதி புதுச்சேரியில் நடந்தது. முன்னதாக நிரஞ்சினி சில தினங்களுக்கு முன் சக தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி நடத்தினார். தோழிகள் எல்லோரும் கருப்பு டி ஷர்ட் அணிந்து பார்ட்டியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிரஞ்சனி சகோதரி விஜய லட்சுமி, கனி ஆகியோரும் கலந்துகொண்டனர். பார்ட்டி படங்களை விஜயலட்சுமி நெட்டில் பகிர்ந்திருந்தார். தற்போது நிரஞ்சனி தேசிங்கு பெரியசாமி திருமண படம் வெளியாகி உள்ளது.

You'r reading பிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சைக்கிளில் தல கம்மிங்.. நெட்டில் போட்டோ வைரல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்