நடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..

சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ள யாரும் நடிக்க வரலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜன், நடன இயக்குனர் பிரபுதேவா, தினேஷ், ராஜூ சுந்தரம், இசை அமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்கள், எடிட்டர்கள் உள்ளிட்டவர்கள் எனப் பல தரப்பினரும் நடிகர் ஆகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகிறார் மற்றொரு இசையமைப்பாளர்.

வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசை அமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இத்திரைப் படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பைச் சரண் சண்முகம் மேற்கொள்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் அவர்களிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்குகிறது.

You'r reading நடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்