பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முழுமுழுக்க கூட்டு குடும்ப பாணியில் உள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. சீரியலின் முக்கிய ஜோடிகள் என்றால் அது கதிர்-முல்லை தான். இவர்களின் லவ் கெமிஸ்ட்ரி இந்த காலத்து இளைஞர்களையும் தன் வசம் இழுத்துள்ளது. சோசியல் மீடியாவில் இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இயங்கி வருகின்றது.

அதுவும் குமரனுக்கு திருமணம் ஆகி இருந்தாலும் அவருக்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம். இந்நிலையில் குமரனின் பிறந்தநாளையொட்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் குமரனின் மனைவி உள்ளிட்ட அனைவரும் ஒரு ஃபேமிலியாக ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் நிஜத்திலும் ஒரு அழகான குடும்பம் என்று நிறுபித்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றது.

You'r reading பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அய்யாத்துரையின் அசத்தல் பிளான்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்