களைக்கட்டும் குக்வித் கோமாளி வைல்ட் கார்டு..அடுத்த பைனலிஸ்ட் யார்?

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . இந்நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியில் ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி வைல்ட் கார்டு எண்ட்ரியில் ரசிகர்களின் ஃபேவரிட் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.

மற்றவர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் வைல்ட் கார்டு எண்ட்ரியில் மீண்டும் வந்துள்ளனர். தர்ஷா குப்தா, ரித்திகா, பவித்ரா லட்சுமி, ஷகிலா, தீபா சங்கர், மதுரை முத்து ஆகியோர் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.இதனால் இந்த வாரம் எண்டர்மெயிண்ட் 200% உறுதி என ரசிகர்கள் நிகழ்ச்சி புரோமோவினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் .

You'r reading களைக்கட்டும் குக்வித் கோமாளி வைல்ட் கார்டு..அடுத்த பைனலிஸ்ட் யார்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்