ரஜினி மீது எனக்கு வருத்தம் – கே.எஸ்.ரவிக்குமார் கூறும் காரணம்!

ரஜினி அரசியலுக்கு வராததில் தனக்கு வருத்தம் என்று இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

யாராடி நீ மோகினி படத்தின் மூலம் மாஸான ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மித்ரன் ஜவகர். குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ள அவரது அடுத்த படைப்பு மதில். இந்த படம் ஜீ5 தளத்தில் வரும் 14ந்தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன்தயாரித்துள்ளார். இந்நிலையில் மதில் படத்தில் நடித்த அனுபம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், `` மனசாட்சி சொல் படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் மதில். கொரோனா காலகட்டத்தில் நடித்து முடித்தேன். கதையை கேட்டதும் தியேட்டருக்கே பண்ணலாமே என்றுகூட கேட்டேன்.

கதை முதல் உருவாக்கம் வரை அனைத்துமே அப்படி பிரம்மாண்டமாக தான் இருந்தது. ஓடிடி வளர்கிறது. அதை தடுக்க முடியாது. ஆனால் இது இன்னொரு தளம் தானே தவிர தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரசிகர்கள் தாங்கள் விரும்பும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் விரும்புவார்கள். ஓடிடியில் படங்களை ரீலிஸ் செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியவர் சூர்யா.

டிஜிட்டல் முறை வந்த பிறகு சினிமாவில் செலவு குறைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை அதிகரித்திருக்கிறது. சரியான திட்டமிடல் தான செலவை குறைக்கும். ரஜினி, கமலை மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டால் நான் தயாராக தான் இருக்கிறேன். கதைகள் நிறைய இருக்கின்றன.

கமல், உதயநிதி, குஷ்பு என நண்பர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். அனைவருமே வெற்றி பெற விரும்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது எனக்கே வருத்தமாக தான் இருந்தது. அறிவித்த சில நாட்களுக்கு பின் பேசினேன். ஆனால் எல்லாவற்றையும்விட அவரது ஆரோக்கியம் தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்

You'r reading ரஜினி மீது எனக்கு வருத்தம் – கே.எஸ்.ரவிக்குமார் கூறும் காரணம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொலஸ்ட்ராலை குறைக்கும்... முடக்குவாத வலிகளை போக்கும்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்