பிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த குட்டி பிரபலம்!

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதுன். இப்படத்திற்கு சிறந்த இந்தி படம், நடிகர் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் இப்படம் ரீமேக் ஆகிறது என்று அறிவிக்கப்பட்டாலும் டைட்டில் ஜனவரி 1ம் தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்துக்கு அந்தகன் என பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்க, முக்கிய கேரக்டரில் சிம்ரன் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்குவதாக இருந்த நிலையில் கடைசியில் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். பிரியா ஆனந்த், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் என மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தியாகராஜன் தயாரிக்கிறார். கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

பியானோ இசை கலைஞர் வேடம் ஏற்றிருக்கும் பிரசாந்த் கிறிஸ்துமஸ் தினத்தன்று பியானோ இசைத்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். லண்டன் இசைக் கல்லூரியில் பியானோ இசை கிரேட் 4 முடித்தவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதுன் ரீமேக் பிரசாந்த்துக்கு இந்த ஆண்டில் திருப்பு முனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்தப் படத்தில் சிறுவன் பூவையார் தற்போது இணைந்துள்ளார். இதைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பூவையார் விஜய் டிவியின் `சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கானா பாடல்களைப் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது பிரசாந்துடன் கைகோர்த்துளளார்.

You'r reading பிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த குட்டி பிரபலம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பறிக்கப்பட்ட `திருமதி இலங்கை பட்டம் - விட்டுக்கொடுத்து உருகிய அழகி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்