“நான் அப்படிப்பட்டவள் கிடையாது” – ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த நிவேதா தாமஸ்

“நான் அப்படிப்பட்டவள் கிடையாது” – ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த நிவேதா தாமஸ்

“பிங்க்” என்ற இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள “வக்கீல் சாப்” படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நிவேதா தாமஸ், தியேட்டருக்கு சென்று வக்கீல் சாப் படத்தை பார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று 3 ஆம் தேதி கூறிவிட்டு, தியேட்டுக்கு வரலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். நெகட்டிவ் என்று வந்திருந்தாலும் 15 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டுமே என கூறியுள்ளனர்.

இது குறித்து நடிகை நிவேதா தாமஸ், “தனக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது என்றும், அதன் பிறகே நான் தியேட்டருக்கு சென்றேன் என விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவுடன் தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் உயிருடன் விளையாடும் அளவுக்கு நான் பொறுப்பில்லாதவள் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்த நிவேதா, கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்ததை சொல்லாததால் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

You'r reading “நான் அப்படிப்பட்டவள் கிடையாது” – ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த நிவேதா தாமஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கறிவேப்பிலையை தூக்கி எரிபவர்களா நீங்கள்?? தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நன்மை?? வாங்க தெரிந்துகொள்வோம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்