“மஞ்ச காட்டு மைனா” – நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்…

இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகை சமந்தாவின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் கதாபாத்திரம் நடத்தி பட்டையை கிளப்பினார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கி, விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், நடிகை சமந்தாவுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை சமந்தா எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பவர். சமந்தாவை இதுவரை 16 மில்லியனுக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் மாடர்ன் உடையணிந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சமந்தா. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ் குவித்து வருகிறது.

You'r reading “மஞ்ச காட்டு மைனா” – நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்… Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2 வது கணவனை கொலை செய்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்