இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார்!

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.

2005ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய அயன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று, சூர்யாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்தது. 2011ல் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படமும் வசூலை அள்ளியது.

இது தவிர, மாற்றான், அநேகன், காப்பான், கவண் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இது தவிர இயக்குநர் ஷங்கர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

You'r reading இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்