நடிகை கஜோல் கணவர் விமான விபத்தில் மரணமா..?

நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் விமான விபத்தில் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

மும்பையிலிருந்து படப்பிடிப்புக்காக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது சொந்த விமானத்தில் பயணம் செய்யும் நேரத்தில் விபத்து ஏற்பட்டதாகக் காலையில் இருந்தே செய்திகள் வெளியாகி வருகின்றன.

விமான விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அஜய் தேவ்கன் மரணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது அஜய் தேவ்கன் மற்றும் ரன்பீர் கபூர் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் இயக்குநர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் லவ் ராஜன் அஜய் தேவ்கன் மற்றும் ரன்பீர் கபூருடன் உரையாடும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன் தரப்பிலிருந்து மறுப்புகள் அல்லது தெளிவுரைகள் ஏதும் வரவில்லை.

ஆனால், விபத்து நடந்ததாகக் கூறப்படும் மஹாபலீஸ்வர் பகுதியில் அப்படி ஏதும் விபத்து நடக்கவில்லை என அப்பகுதி போலீஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நடிகை கஜோல் கணவர் விமான விபத்தில் மரணமா..? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளவரசர் ஹாரி- மார்க்லே திருமணத்துக்கு வர முடியாதே..வருத்தத்தில் தந்தை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்