பட்டைய கிளப்பும் கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்..

நயன்தாரா  மற்றும் யோகி பாபுவின்  காட்சிகள் இடம்பெற்றுள்ள கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் கோலமாவு கோகிலா என்கிற கோகோ. இந்த படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கித்துவம் அளிக்கும் படம் என்பதால், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.

நயன்தாராவை தவிர, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. பின்னர், படத்தில் இருந்து எதுவரையோ என்ற பாடல் ரிலீஸ் செய்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து, கல்யாண வயசாச்சு என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி பட்டைய கிளப்பி வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பட்டைய கிளப்பும் கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாகர் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா...?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்