மகனின் பிறந்தநாளன்று படம் ரிலீஸ்: மகிழ்ச்சியில் எஸ்.ஏ.சிnbsp

விக்கி இயக்கத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள படம் ட்ராபிக் ராமசாமி. சமூக ஆர்வலர் "ட்ராபிக் ராமசாமி"யின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தின் ஒளிப்பதிவாளர் குகன் எஸ்.பழனி. பால முரளி இசையமைத்து இருக்கிறார்.
ரோகினி, கஸ்தூரி, அம்பிகா, பிரகாஷ் ராஜ், ஆர்.கே.சுரேஷ், மனோபாலா என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, விஜய் அன்டனி, சீமான், குஷ்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 
 
படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது பல தரப்பட்ட மக்களிடத்தில் வரவேற்பை பெற்றது. 
படத்தின் இரண்டு பாடல்கள் "போராளி அந்தெம்", "கோமாளி" ஏற்கனவே வெளியாகி அசத்தியது. இந்நிலையில் நேற்று இசை வெளியிட்டு விழாவில் மீதம் உள்ள பாடல்கள் வெளியிடப்பட்டது.
 
டீஸர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து "ட்ராபிக் ராமசாமி" ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்-ன் பிறந்தநாள் ஆன ஜூன் 22ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மகனின் பிறந்தநாள் அன்று தன்னுடைய படம் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி என்று எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

You'r reading மகனின் பிறந்தநாளன்று படம் ரிலீஸ்: மகிழ்ச்சியில் எஸ்.ஏ.சிnbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் உயர்வு: 2 வாரங்களில் அரசாணை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்