அசுரவதம் செய்ய 29ந் தேதி வருகிறார் சசிகுமார்nbsp

பிரபல இயக்குனர் நடிகராக அவதாரமெடுத்த முதல் படம் சுப்ரமணியபுரம். அதனை தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து நடித்து வந்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. தனது ஆசான் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடித்தும் அசத்தினார். 
கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் கொடி வீரன். அதனை தொடர்ந்து அவர் நடித்து வந்த படங்கள் நாடோடிகள்-2 மற்றும் அசுரவதம். இரண்டுமே தற்போது முடிவடைந்துள்ள நிலையில் முதலில் அசுரவதம் திரைப்படத்தை வெளியிட தேதி குறித்துள்ளனர்.
 
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடித்துள்ள அசுரவதம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்து கோவிந்த் மேனன் இசையமைத்துள்ள இப்படத்தின் உரிமையை  பிரபல தொலைக்காட்சியான சன் டிவி வாங்கியுள்ளது. அசுரவதம் படத்தை இம்மாதம் இறுதியில், அதாவது 29ந் தேதி வெளியிட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading அசுரவதம் செய்ய 29ந் தேதி வருகிறார் சசிகுமார்nbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேல்முருகன் ஜாமீன் விவகாரத்தில் போலீஸ் பதில் அளிக்க வேண்டும்: ஐகோர்ட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்