பாரிஸ் பாரிஸ் திரைப்படம் மூலம் தயாரிப்பாளரான முன்னணி நடிகை

paris paris

நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா என முன்னணி நடிகைகள் தங்களுக்கான புதிய திரைப்படம் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

ஆனால் அப்படி நடிகைக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை. அதன் காரணமாக கதையின் நாயகிகள், தங்களுக்கான படத்தை தயாரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது இணைந்து இருப்பவர் காஜல் அகர்வால். முன்னணி கதாநாயகர்களுடன் ஆட்டம் போட்ட நாயகி, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்து வருகிறார். பாரிஸ் பாரிஸ் என பெயரிடப்பட்ட புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தயாரிப்பாளரும் காஜல் அகர்வாலே ஆவார். மேலும் தான் நடிக்கவிருக்கும் படங்களை தானே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

You'r reading பாரிஸ் பாரிஸ் திரைப்படம் மூலம் தயாரிப்பாளரான முன்னணி நடிகை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லண்டனில் பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்