வைரலாகி வரும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் சிங்கிள் டிராக் (வீடியோ)

நடிகர் மிர்ச்சி சிவா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவா நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் தமிழ்ப்படம். இந்த படத்தில், தமிழ் திரைப்படங்களை கலாய்த்து முழு கதையே நகரும். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து, தமிழ்ப்படம் 2.0 விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, இந்தப் படத்தின் டீஸர், சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது வீடியோ சிங்கள் டிராக் இன்று வெளியானது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் வசனங்கள மற்றும் பாடல்களை கலாய்த்து நான் யாருமில்லை எனத தொடங்கும் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

You'r reading வைரலாகி வரும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் சிங்கிள் டிராக் (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திகார் சிறையில் கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்