விஜய் சேதுபதியின் 96 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

"96" விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்துள்ள புதிய திரைப்படத்தை இயக்கி, இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்.

16, 36 மற்றும் 96 வயது என மூன்று கெட்-அப்பில் நடித்து அசத்தி இருக்கிறார் விஜய்சேதுபதி. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கவுள்ளது படக்குழு.

மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் எஸ்.நந்தகுமார் சார்பில் தயாரான இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கோவிந்த் மேனன். ஒளிப்பதிவு செய்துள்ளார் சண்முகசுந்தரம். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி என பிரபலங்கள் படத்தில் இணைந்துள்ளனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 12ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ்.

You'r reading விஜய் சேதுபதியின் 96 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்கார் போஸ்டரை கலாய்த்து ரிலீஸ் தேதியை அறிவித்த தமிழ்ப்படம் 2.0

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்