ஸ்ரீரெட்டியின் பட்டியலில்..ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகர்

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என அவ்வப்போது ஒவ்வொரு நடிகையாக குரல் கொடுத்தும், கண்டனங்களை தெரிவித்தும் காணாமல் போகின்றனர். ஆனால் தொடர்ச்சியாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் என தென் சினிமாவின் முக்கிய பிரபலங்களை குறிவைத்து தாக்கி வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.
இந்த நிலையில் தெலுங்கு மட்டும் இல்லை தமிழ் சினிமாவிலும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் அதில் ஒரு முக்கிய இயக்குனரும் இருக்கிறார் என கூறிவந்த ஸ்ரீ ரெட்டி திடீரென நேற்று தனது முகப்புத்தக பதிவில் தமிழ் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜி, எப்படி இருக்கீங்க? வெலிகொன்டா ஸ்ரீனிவாசன் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.  க்ரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா? எனக்கு படவாய்ப்பு தருகிறேன் என்று கூறினீர்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு வாய்ப்பும் எனக்கு தரவில்லை என்றும் நீங்களும் ஒரு பெரிய மனிதரே என்று பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லை, தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த், 5 வருடத்திற்கு முன்னர் ஹைதராபாத்-ல் நடந்த நட்சத்திர கிரிக்கெட் விழா முடிந்ததும் பார்ட்டியில், என்னோடு நடனமாடும் போது எனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று நீங்கள் செய்த சத்தியம் ஞாபகம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

You'r reading ஸ்ரீரெட்டியின் பட்டியலில்..ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்