நட்புன்னா என்னனு தெரியுமா? படத்தை தடை செய்தது உயர்நீதிமன்றம்

சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்தில் நடக்கும் சில விஷயங்களுக்காக குரல் கொடுத்து வந்தார் நடிகை ரம்யா நம்பீசன்.

தமிழில் பிட்சா, சேதுபதி, நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும், சத்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அறிமுக நாயகன் கவின் நடித்து வெளிவர இருக்கும் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரம்யா நம்பீசன்.

பட வேலைகள் முடிந்து வெளியாக உள்ள நிலையில் படத்தின் வெளிநாட்டு உரிமையை மலேஷியா பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் ரவிந்தரிடம் வாங்கியள்ளதாகவும், அதற்காக அவர் முன் பணம் ரூ.8 லட்சத்தை முதலில் கொடுத்ததாகவும், மேலும் அவ்வப்போது என மொத்தம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

ஆனால் திட்டமிட்டபடி சொன்ன தேதியில் படம் வெளியாகாததால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும் படி கேட்டேன். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளேன்.

என்னிடம் வாங்கிய பணத்தை தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார் மலேஷியா பாண்டியன்.

இந்நிலையில், ஜூலை 27ம் தேதி வெளியாக இருந்த இப்படத்திற்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

You'r reading நட்புன்னா என்னனு தெரியுமா? படத்தை தடை செய்தது உயர்நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆறுமுகசாமி ஆணையத்தில் தீபா புதிய மனு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்