விளம்பரத்திற்கு நடிக்க ரூ.6 கோடி சம்பளம் பெறும் பாலிவுட் நடிகர்

2007ல் வெளியான சாவர்யா அறிமுகமான ரன்பீர் கபூர் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகனாக விருது பெற்றார். கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரன்பீர் கபூர், மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பதிலும் தயங்குவதில்லை.

இதன் காரணமாக பெண் ரசிகர்களை ஈர்த்து முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்தார். ரன்பீர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகனான நடிகர் ரன்பீர் கபூர் தனது தந்தையின் மூலம் அறிமுகமானாலும் ஒரு போதும் அவரின் பெயர் உபயோகித்தது இல்லை.

பட்சனா ஹே ஹஸினோ, பர்ப்பி, ஹே தில் ஹே முஷ்கில், ஜக்கா ஜசூஸ், போன்ற பல திரைப்படங்கள் இவரின் நடிப்பை வெளிப்படுத்தின.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சஞ்சு. பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். சஞ்சு படத்திற்காக சஞ்சய் தத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்தார். அவரின் தோற்றம் முதல் பேச்சு நடை பாவனை என அனைத்திலும் அசத்தினார்.

உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற சஞ்சு, சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனையும் பெற்றது. சஞ்சு திரைப்படத்தின் வெற்றியின் மூலம் ரன்பீர் கபூரின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது.

படத்தில் மட்டுமல்ல இவர் நடிக்கும் விளம்பர படத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றே சொல்லலாம். அப்படி அவர் நடிக்கும் இரு சக்கர வாகனம், பெயிண்ட், குளிர் பானம், என அணைத்து விதமான விளம்பரங்களுக்கு அவர் வாங்கும் சம்பளம் ரூ.3 கோடி. அது ஒரு நாளைக்கு மட்டும் என தகவல்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், அவர் நடித்த சஞ்சு படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு விளம்பர படத்தில் நடிக்கவும் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அதுவும் இரு மடங்கு, ரூ.3 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக உயர்த்தியுள்ளார். ஆனால், விளம்பர நிறுவனங்கள் அதற்கு தயார் என தகவல்கள் கூறுகின்றன.

You'r reading விளம்பரத்திற்கு நடிக்க ரூ.6 கோடி சம்பளம் பெறும் பாலிவுட் நடிகர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடா...?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்