பாஸ்கர் ஒரு ராஸ்கல் பொங்கல் ரிலீஸ்

அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் பொங்களுக்கு ரிலீஸ் என பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’. இதில், மம்மூட்டி&நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படம் மல்லுவுட்டில் வெற்றிபெற்றதை அடுத்து, தமிழில் ரீமேக் செய்ய இயக்குனர் முடிவெடுத்தார் சித்திக்.

அதன்படி, தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என பெயரிட்டு ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தில், அரவிந்த் சாமியும் அமலா பாலும் நடிக்கின்றனர். ரமேஷ் கண்ணா இந்தப் படத்திற்கு வசனம் எழுதி, முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.

You'r reading பாஸ்கர் ஒரு ராஸ்கல் பொங்கல் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘காட்டேரி’யில் ஹன்சிகா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்