முதலில் கமல் அடுத்து ரஜினி சிபிராஜ் யோசனை..

வாரிசு நடிகரான சிபிராஜ் தன்னை சினிமா துறையில் முன்னணி நடிகராக மாற்ற நீண்ட நாட்களாக போராடி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான திரைப்படம் "சத்யா".

நடிகர் கமல்ஹாசனின் 1988ல் வெளியான திரைப்படம் சத்யா. கமல், அமலா ஜோடியாக நடித்த இப்படத்தினை கமல்ஹாசன் தயாரித்து இருந்தார்.

கமல்ஹாசனின் அனுமதியோடு, இதே பெயரை பயன்படுத்தி சமீபத்தில் வெளியான சத்யா திரைப்படம் சிபிராஜ்க்கு திருப்புமுனை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், சிபிராஜ் அடுத்து இயக்குனர் வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். 1982ல் தியாகராஜன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த திரைப்படமான ரங்கா.

கே.ஆர்.விஜயா, ராதிகா, சில்க் ஸ்மிதா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்து இருந்தனர். தற்போது சிபிராஜ் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு ரஜினியின் ரங்கா படத்தின்  பெயரை வைக்க  முடிவு செய்துள்ளார். சிபிராஜ்க்கு ஜோடியாக "கிடாரி"  நிகிலா விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

You'r reading முதலில் கமல் அடுத்து ரஜினி சிபிராஜ் யோசனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீடியோவை வெளியிட்டத்தை சசிகலா ஏற்று கொள்வார் - திவாகரன் மகன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்