செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை ரிலீஸ் செய்யப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் "செக்க சிவந்த வானம்". பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன்ஸ் வேளைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஜோதிகா என அனைவரின் கதாபாத்திரங்களும் அந்த முதல் காட்சி புகைப்படங்களில் இடம் பிடித்தன.

இந்நிலையில் படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் அற்புதமாக படமாகியுள்ள செக்க சிவந்த வானம், தெலுங்கு மொழியிலும் மொழி பெயர்ப்பாகி செப்டம்பர் மாதம் 28ந் தேதி வெளியாகவுள்ளது.

You'r reading செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆசிய விளையாட்டு: டென்னிஸ் மற்றும் படகுப் போட்டிகளில் தங்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்