அருண் விஜய் 8 பேக்ஸ்.. சூரியுடன் போட்டியா?

அருண் விஜய் சூரியுடன் போட்டியா

சிவகார்த்திகேயனின் சீமராஜா டிரெய்லர் வந்தவுடன், அருண்விஜய் ட்விட்டரில் பதிவிட்ட, “யாரெல்லாம் மாஸ் காட்டுறது, என்ற வெவஸ்த்தையே இல்லாம போச்சு” என்ற ட்வீட், சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பின்னர், என்னுடைய டுவிட்டர் பக்கம் ஒரு மணி நேரம் ஹேக் செய்யப்பட்டது. தவறான ட்வீட்களுக்கு மன்னிக்கவும் என பிரச்னையை அருண் விஜய் சமாளித்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, சீமராஜா படம் வெளியாவதற்கு முன் தினம், சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், பகிர அது, டுவிட்டரில் பல பிரபலங்களின் பாராட்டை அள்ளியது.

இந்த பாராட்டுக்களை பொறுக்காமல் தான் தற்போது, அருண் விஜய் தனது 8பேக்ஸ் பாடி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

இந்த 8 பேக்ஸ், அருண் விஜய்யின் அடுத்த படத்திற்கான உழைப்பு என்றும், அது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் அவரது சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஸ்மார்ட் வில்லனாக நடித்துள்ள அருண் விஜய், ஏன் தேவையில்லாமல் சிவகார்த்திகேயனுடன் ஈகோ போர் புரிய வேண்டும் என கோலிவுட் வட்டாரங்கள் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

எதுவாக இருந்தாலும், சிக்ஸ் பேக் வைத்த சூரியையும், 8பேக்ஸ் வைத்த அருண் விஜய்யின் உழைப்பையும் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்!

You'r reading அருண் விஜய் 8 பேக்ஸ்.. சூரியுடன் போட்டியா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிலவுக்கு சுற்றுலா செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்