த்ரிஷாவின் புதிய பாய் பிரண்ட்... யார் தெரியுமா?

த்ரிஷாவின் புதிய பாய் பிரண்ட்

தமிழ் சினிமாவில் 19 ஆண்டுகளாக நடித்து வரும் எவர் யூத் நாயகி த்ரிஷா, தனக்கு கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டதாக ஒரு பதிவை டுவிட்டரில் போட்டுள்ளார்.

அண்மையில் த்ரிஷா நடிப்பில் வெளியான நாயகி, மோகினி படங்கள் வரிசையாக தோல்வியை அடைந்தன. இருப்பினும் அவரின் நடிப்பில் 96, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, 1818, பரமபதம் விளையாட்டு, சூப்பர்ஸ்டாரின் பேட்ட என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

சமீபத்தில், வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்ற த்ரிஷா, அங்கு தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில், டால்பினை கட்டிப்பிடித்தபடி முத்தம் கொடுத்து, கொஞ்சி மகிழ்ந்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அத்துடன், "நம்புங்கள் கண்டதும் காதல்" என பதிவிட்டிருக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால், அந்த டால்பினும் நம்ம த்ரிஷாவிற்கு முத்தம் கொடுத்தது தான்!

ஒருவழியாக த்ரிஷாவிற்கு புதிய பாய் பிரெண்ட் கிடைச்சிடுச்சி!

You'r reading த்ரிஷாவின் புதிய பாய் பிரண்ட்... யார் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கீரின் டீயால் மறைக்கப்பட்ட பாரம்பரியமிக்க வெந்தய டீ.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்