இரும்புத்திரை இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் !

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமான இரும்புத்திரை படத்தை கொடுத்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷாலை வைத்து, ஸ்மார்ட் போன் மற்றும் டெக்னாலஜியின் திருட்டை மையமாக வைத்து பி.எஸ். மித்ரன் இயக்கிய இரும்புத்திரை படம் மக்களை மிரட்டியதுடன் 100 நாட்களை கடந்து ஓடியது.

இந்நிலையில், சீமராஜா வசூல் மழையில் திளைத்திருக்கும் சிவகார்த்திகேயன், ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ள காமெடி படம் மற்றும் ”இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் ஏலியன் படத்தில் நடித்தவுடன், நிறைய டீட்டெய்லிங் மற்றும் ஆக்‌ஷன் கொண்ட மித்ரனின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ரெமோ, வேலைக்காரன் மற்றும் சீமராஜா படங்களை தயாரித்த ஆர்.டி. ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்கின்றதாம்.

You'r reading இரும்புத்திரை இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட் ஆலை: ஆய்வு நடவடிக்கைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடும் எதிர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்