மேடம் டுசாட்ஸில் சன்னிலியோன் மெழுகுச் சிலை திறப்பு !

பாலிவுட் கிளமர் குயின் சன்னி லியோனுக்கு டெல்லி உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் பார்ன் வீடியோக்கள் மூலமாக அகில உலக பிரபலமாக வலம் வரும் சன்னி லியோன், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்த சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் சன்னி லியோனை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது. மேலும் 2017-ம் ஆண்டு அதிகம் கூகுளில் தேடப்பட்ட நபரும் இவர்தான்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஷாரூக்கான், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சன்னிலியோனுக்கு மட்டுமே தனி ஸ்பெஷல்:

ஆளு உயர அளவில் வைக்கப்படும் மெழுகு சிலையில், சன்னி லியோனுக்கு மட்டும் உலகிலேயே முதன்முறையாக எப்போதும் வாசனை வீசும் மெழுகு சிலையை மேடம் டுசாட்ஸ் வடிவமைத்துள்ளது. சிலையை பார்த்து செல்பி எடுக்க வருபவர்களுக்கு, சன்னி லியோனின் வாசனையை நுகரும் வாய்ப்பும் கிட்டும்.

ஹேப்பியான சன்னி லியோன்:

தனது மெழுகு சிலையை கண்ட சன்னிலியோன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சிலை அருகில் செல்ஃபி மற்றும் விடியோக்களை எடுத்துக் கொண்டார். பின்னர், ரசிகர்களை சந்தித்த அவர், உங்களின் அன்பிற்கு நன்றி எனத் தெரிவித்தார்.

You'r reading மேடம் டுசாட்ஸில் சன்னிலியோன் மெழுகுச் சிலை திறப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரும்புத்திரை இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்