ஐ.நா.வில் திரையிடப்படும் முதல் இந்திய படம்!

ஐ.நா.,வில் திரையிடப்படும் முதல் இந்திய படம்!

பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட, 'லவ் சோனியா' என்ற திரைப் படம், அடுத்த மாதம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., அலுவலகத்தில் திரையிடப்படுகிறது.

வாங்கிய கடனை அடைப்பதற்காக, தந்தையால் விற்கப்பட்ட இந்திய கிராமத்து இளம் பெண், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதை மையமாக வைத்து, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகில் நடக்கும் மூன்றாவது பெரிய க்ரைம் தொழிலாக பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தும் குற்றம் நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் உலகில் 4 பெண்கள் கடத்தப்படுகின்றனர்.

இந்த கசப்பான உண்மைகளை அடிப்படியாகக் கொண்டு லவ் சோனியா படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடனுக்காக மகளை தந்தை விற்கிறார். அவர் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார். பிரிந்த தனது சகோதரியை தேடி ஒரு பாசத் தங்கை பல தடைகளை தாண்டி அவளை காண்கிறாள் என படத்தில் நெஞ்சை பிழியும் காட்சிகள் நிறைந்துள்ளன.

இப்படத்தை இயக்குநர் தப்ரேஸ் நூரானி இயக்கியுள்ளார். மனோஜ் பாஜ்பாய், ரிச்சா சத்தா, ராஜ்குமார் ராவ், சாய் தம்ஹன்கர், அடில் ஹுசைன், அனுபம் கேர், டெமி மூர், மார்க் டுப்லாஸ் மற்றும் ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் நாயகி ஃப்ரீடோ பிண்டோ என திறமை வாய்ந்த நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். செப்டம்பர் 14ஆம் தேதி ரிலீஸான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

'லவ் சோனியா’ டிரெய்லர் இதோ..

You'r reading ஐ.நா.வில் திரையிடப்படும் முதல் இந்திய படம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்