கீர்த்தி சுரேஷுக்கு மலையாளத்திலும் ரெட் கார்ப்பெட்!

கீர்த்தி சுரேஷுக்கு மலையாளத்திலும் ரெட் கார்ப்பெட்!

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 2.0 வெர்ஷனை துவங்கியுள்ளார். தமிழில் விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஷாலுடன் சண்டக்கோழி, விஜய்யுடன் சர்க்கார் என அடுத்தடுத்து மெகா நட்சத்திரங்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது தாய் மொழியான மலையாளத்தில் மீண்டும் கால் பதிக்கவுள்ளார். அதுவும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கோழிக்கோட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு கடற்படை தளபதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், பின்னர் கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர், டர்போனி ஆகிய படங்களில் நாயகியாக நடித்த அவர், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக தற்போது, மாறியுள்ள நிலையில், மீண்டும் மலையாள திரையுலகம் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிகப்பு கம்பளம் விரித்துள்ளது.

You'r reading கீர்த்தி சுரேஷுக்கு மலையாளத்திலும் ரெட் கார்ப்பெட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆரோக்கியமான கேரட் லட்டு செய்வது எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்